டிவிட்டர் இந்தியா நிர்வாகியை கைது செய்ய தடை விதித்த நீதிமன்றம்!

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (20:55 IST)
டிவிட்டர் இந்தியா நிர்வாகியைக் கைது செய்ய தடை விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தில் காசியாபாத்தில் கடந்த 5-ம் தேதி இஸ்லாமிய மதத்தை சார்ந்த ஒரு முதியவர் 5-க்கும் மேற்பட்டோர் தாக்கினர். மேலும் அவரை ஜெய் ஸ்ரீராம் என சொல்ல சொல்லி தாக்கியதாக வீடியோ டிவிட்டரில் வைரலானது. ஆனால் விசாரணையில் அவர் மத ரீதியாக தாக்கப்படவில்லை என உபி போலீஸாரால் சொல்லப்பட்டது.

இதனால் அந்த வீடியோவை நீக்க டிவிட்டர் இந்தியா நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அதை நீக்கவில்லை. இந்நிலையில் உத்தரபிரதேச போலிஸார் டிவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதுகுறித்த வழக்கு கர்நாடக நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிமன்றம் மனீஷ் மகேஷ்வரியை கைது செய்ய கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மேலும் காணொளி மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments