Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்: நேரில் ஆஜராக உத்தரவு..!

Siva
திங்கள், 26 மே 2025 (09:14 IST)
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார். இதுபற்றிய அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், நேரில் ஆஜராகவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தி தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம், ராகுல் காந்தியின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவர் நேரில் ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
 
இந்த நிலையில், மீண்டும் நேரில் ஆஜராகவிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என ராகுல் காந்தியின் வழக்கறிஞர்  கோரியபோது, அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, "ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராக வேண்டும். இல்லையேல், ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும்," என உத்தரவிட்டார்.
 
எனவே, இன்று அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: நீலகிரி மாவட்ட சுற்றுலாதலங்கள் இன்று மூடல்..

2 கன்னியாஸ்திரிகள் கைதுக்கு கிறிஸ்துவர்களின் ரியாக்சன்.. இந்துக்களிடம் இந்த ஒற்றுமை ஏன் இல்லை? இந்து தலைவர் கருத்து!

நீங்கள் மட்டும் வாங்கலாமா? ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் அமெரிக்காவுக்கு இந்தியா கேள்வி..

அடுத்த கட்டுரையில்
Show comments