Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிவ் இன் உறவிலிருந்து பிரிந்தாலும் கட்டாயம் ஜீவனாம்சம் தர வேண்டும்.. நீதிமன்றம் தீர்ப்பு

Mahendran
திங்கள், 8 ஏப்ரல் 2024 (16:00 IST)
லிவ் இன் உறவிலிருந்து பிரிந்தாலும் பெண் ஜீவனாம்சம் கேட்டால் அதை கண்டிப்பாக கொடுத்து தான் ஆக வேண்டும் என மத்திய பிரதேச மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 வெளிநாட்டில் இருந்த கலாச்சாரமான லிவ் இன் உறவு என்பது கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவிலும் உள்ளது என்றும் சில ஆண்டுகள் வாழ்ந்து விட்டு அதன் பிறகு பரஸ்பரம் பிரிந்து விடும் வாழ்க்கை நிலை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் லிவ் இன் உறவு முறையில் வாழ்பவர்களுக்கு எந்தவிதமான சட்டபூர்வ அங்கீகாரமும் கிடைக்காது என்றும் கணவன் மனைவி குடும்பம் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் வாரிசு போன்ற உரிமைகள் கிடைக்காது என்றும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் லிவ் இன் உறவு முறையிலிருந்து இருவரும் பிரியும்போது அந்த உறவில் இருந்த பெண் ஜீவனாம்சம் கேட்டால் கண்டிப்பாக உறவில் இருந்த ஆண் கொடுக்க வேண்டும் என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
லிவ் இன் உறவுமுறை என்பதே எந்தவிதமான நிபந்தனை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் இருக்கும் நிலையில் ஜீவனாம்சம் மட்டும் எப்படி வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற சாமியாருக்கு 40 நாட்கள் பரோல்.. இது 14வது முறை..!

ராமர், சீதை, காகம் பெயர்களில் இருப்பிட சான்றிதழ்.. பீகாரில் அரசு நிர்வாகத்தின் அலட்சியம்..!

பாராளுமன்றத்தில் அமளி நீடித்தால் விவாதமின்றி மசோதா நிறைவேற்றம்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

1 ஆண் குழந்தையை விட்டுவிட்டு 3 பெண் குழந்தைகளை வெட்டி கொலை செய்த தந்தை.. ராசிபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி செங்கோட்டையில் நுழைய முயன்ற 5 வங்கதேசத்தினர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments