Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோயில்களுக்கு முறையாக நிதி வழங்குவதில்லை : உபி அரசு மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!

கோயில்களுக்கு முறையாக நிதி வழங்குவதில்லை : உபி அரசு மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்..!

Mahendran

, புதன், 20 மார்ச் 2024 (10:02 IST)
கோயில்களுக்கு முறையாக அரசு நிதி வழங்குவதில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரப்பிரதேசம் மாநில அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மாநில அரசுகளே அந்தந்த மாநிலங்களில் உள்ள கோவில்களை பராமரித்து வருகிறது என்றும் இதற்காக தனி அமைச்சகம் வைத்துள்ளது என்பதை தெரிந்தது. 
 
இந்த நிலையில் உத்தரப்பிரதேச அரசிடமிருந்து கோவில்களுக்கு நிதி பெறுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை இருக்கிறது என்றும் இது மிகுந்த வேதனையை தருகிறது என்றும் இது குறித்த வழக்கு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர் 
 
கோவில்களுக்கு நிதி வழங்குவது என்பது விதிகளின்படி தானாக நடக்க வேண்டும் என்று இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் 
 
கோவில்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளும் நிலையில் அந்த கோவில்களுக்கு செலவழிப்பதில் என்ன தயக்கம் என்று பக்தர்களும் இது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். 

 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தை விட மோசமான நிலை.. பரிதாபத்தில் கேரள பாஜக..!