Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூகுள் ஊழியருக்கு கொரோனா: பெங்களூர் அலுவலகம் மூடப்பட்டதால் பரபரப்பு

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (14:27 IST)
கூகுள் ஊழியருக்கு கொரோனா
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் மனித இனத்தை அழித்து வரும் இந்த வைரஸால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது பலியாகியுள்ளனர். மேலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்தியாவில் 60 பேருக்கு மேல் கொரோனா வைரஸால் தாக்கப்பட்ட உள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒருவர் முதல் முதலாக வைரஸால் உயிரிழந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
 
இந்த நிலையில் பெங்களூரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கூகுள் நிறுவனத்தின் பெங்களூர் கிளை தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாகவும் அதில் பணி செய்து கொண்டிருக்கும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கூகுள் நிறுவன ஊழியர் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தாக்கியதாக வெளிவந்துள்ள செய்தி பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments