Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9 லட்சம் பாதிப்புகளை தாண்டிய இந்தியா! – மாநிலவாரி நிலவரம்!

9 லட்சம் பாதிப்புகளை தாண்டிய இந்தியா! – மாநிலவாரி நிலவரம்!
, செவ்வாய், 14 ஜூலை 2020 (09:50 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பாதிப்பில் ரஷ்யாவை தாண்டி மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் பல மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 9 லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 28 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 9,06,752 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 23,727 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 5,71,460 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,60,924 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,482 பேர் பலியான நிலையில் 1,44,507 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,42,798 ஆக உள்ள நிலையில் 2,032 பேர் பலியாகியுள்ளனர். 92,567 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

டெல்லி – 1,13,740
குஜராத் – 42,722
உத்தர பிரதேசம் – 38,130
மேற்கு வங்கம் – 31,448
தெலுங்கானா – 34,221
ராஜஸ்தான் – 24,936
மத்திய பிரதேசம் – 18,207
கர்நாடகா – 41,581
ஹரியானா – 21,894

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை! – முடிவுகள் வெளியானது!