Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லட்சத்து 18 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் – மாநிலங்களின் நிலவரம்

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (09:15 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 3,583 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 48,534 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 41,642 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,454 பேர் பலியான நிலையில் 11,726 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 13,967 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 12,905 பேரும், டெல்லியில் 11,659 பேரும், ராஜஸ்தானில் 6,227 பேரும், மத்திய பிரதேசத்தில் 5,981 பேரும், உத்தர பிரதேசத்தில் 5,515 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

இன்னும் சில நிமிடங்களில் நாடாளுமன்ற கூட்டம்: பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பிரதமர் மோடி!

கூகிள் மேப்பை நம்பி இடித்த பாலத்தில் பயணம்! ஒட்டு மொத்தமாக பலியான பயணிகள்! - உத்தர பிரதேசத்தில் சோகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments