இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளபோதும் பாதிப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11,439 லிருந்து 11,933 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 377 லிருந்து 392 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1306 லிருந்து 1344 ஆக உயர்ந்துள்ளது
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்தநிலையில், பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,242 ஆக உயர்ந்துள்ளது