Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் புதிதாக 2.32 லட்சம் கொரோனா பாதிப்பு - இந்திய நிலவரம்!

Webdunia
சனி, 17 ஏப்ரல் 2021 (10:24 IST)
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் ஒரு நாள் பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக 2 லட்சத்தை தாண்டி அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,34,692 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,45,26,609 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 1,341 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,75,649 ஆக உயர்ந்தது.
 
மேலும் கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,18,302 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,71,220 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16,79,740 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆழ்ந்த அனுதாபங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்..

போய் வாருங்கள் அப்பா!.. ஈவிகேஎஸ் மறைவு குறித்து ஜோதிமணி எம்பியின் உருக்கமான பதிவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடுமா? அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

பாஜக மூத்த தலைவர் அத்வானி திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments