24 மணி நேரத்தில் புதிதாக 62,258 தொற்று... இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (10:19 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 20 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில், கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,258 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை  1,19,08,910 ஆக உயர்ந்தது. மேலும், புதிதாக 291 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,61,240 ஆக உயர்ந்துள்ளது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 30,386 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,12,95,023 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,52,647 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டிற்கு வந்த புது மணப்பெண் தற்கொலை.. என்ன காரணம்?

துபாயில் படித்த 18 வயது இந்திய மாணவர் திடீர் மரணம்.. இந்த சின்ன வயதில் மாரடைப்பா?

வழக்கு பதியாமல் கட்டப் பஞ்சாயத்து செய்வ்தா? காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்..!

மாமனார் நாராயணமூர்த்தி சொன்னபடி வாரம் 70 மணி நேரம் வேலை செய்யும் ரிஷி சுனக்.. நெட்டிசன்கள் கிண்டல்..!

இந்திய பெண்ணை வேலையில் இருந்து தூக்கிய மெட்டா.. சில நிமிடங்களில் கிடைத்த அடுத்த வேலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments