இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்திருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 35,662 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மேலும் 281 உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 33,798 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்ட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது.