Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!

24 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்! – இந்திய கொரோனா நிலவரம்!
, சனி, 2 அக்டோபர் 2021 (10:02 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,354 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,91,061 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 234 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,573 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 25,455 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,30,68,599 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,73,889 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் இதுவரை 89,74,81,554 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் மட்டும் 69,33,838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காந்தியின் 153 ஆம் பிறந்த நாள்: நினைவில் வந்து போகும் அஹிம்சை போராட்டங்கள்...