Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.59 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு! – அதிர்ச்சியில் மக்கள்!

Webdunia
ஞாயிறு, 9 ஜனவரி 2022 (10:02 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் ஒரே நாளில் 1 லட்சம் பாதிப்புகளை தாண்டியுள்ளது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் மீண்டும் மிக வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,59,632 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 327 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,83,790 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 40,863 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,44,53,603 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5,90,611 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இந்தியாவில் 1,51,57,60,645 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 89,28,316 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments