Publish Date: Tue, 09 Mar 2021 (11:55 IST)
Updated Date: Tue, 09 Mar 2021 (11:58 IST)
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் கடந்த ஒரு ஆண்டு காலமாக பொதுமுடக்க விதிகள் அமலில் உள்ள நிலையில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் முதலாக இந்தியா முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. ஜூன் வரை நீடித்த பொதுமுடக்கம் பின்னர் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக மாற்றப்பட்டது. இந்நிலையில் இடைப்பட்ட காலத்தில் பொருளாதார இடர்பாடுகளால் பல நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி கடந்த ஏப்ரல் 2020 முதல் பிப்ரவரி 2021க்குள் இந்தியா முழுவதும் 10,113 நிறுவனங்கள் மூடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 1,322 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.