இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் டாக்டர் பல்ராம் கொரோனா 2வது அலை குறித்து பேட்டியளித்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இதனால் கொரோனா இரண்டாம் அலை விரைவில் முடிவுக்கு வரும் நம்பப்படுகிறது. முன்னதாக கொரோனா 2வது அலை ஜூலை மாதம் முடிவுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) இயக்குநர் டாக்டர் பல்ராம் கொரோனா 2வது அலை குறித்து பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது,
கொரோனா தொற்றின் 2 வது அலை இன்னும் குறையவில்லை. நாட்டில் உள்ள 80 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் அதிகமாக உள்ளது. இந்த 80 மாவட்டங்கள் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் அடங்கும். எனவே, தொற்று பரவல் அதிகரிக்கும் வகையிலான தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.