25 ஆயிரமாக பதிவான தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (09:30 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் இன்று மீண்டும் குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 25,467 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,24,74,773 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 354 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,35,110 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,17,20,112 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,19,551 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments