இரண்டு நாட்களில் 50 லட்சம் பாதிப்புகளை தாண்டும்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (10:16 IST)
இந்தியாவில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் 92,071 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 48,46,427 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,136 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 79,722 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் 77,512 பேர் ஒரே நாளில் குணமடைந்துள்ள நிலையில் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 37,80,107 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,86,598 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள் ஒன்றுக்கான கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாகவே 90 ஆயிரத்தை தாண்டி இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 50 லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments