Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 லட்சத்திற்கும் கீழ் குறைந்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – இந்திய கொரோனா நிலவரம்!

Webdunia
வியாழன், 12 நவம்பர் 2020 (09:59 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளை விட வேகமாக குணமாகி வருகிறது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 47,905 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 86,83,916 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 550 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,28,121 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 80,66,501 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,89,294 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments