நீண்ட நாட்களுக்கு பின் 15 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள்!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (09:40 IST)
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் கொரோனா பாதிப்புகள் அதிகரிப்பதும், குறைவதுமாக தொடர்ந்து வருகிறது.
 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு பின்னர் தளர்வுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 30 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,823 பேர் பாதித்துள்ளனர்.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,40,015,743 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 226 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,51,189 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 22,844 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,33,42,901 ஆக உயர்ந்துள்ளது.  இந்தியாவில் இதுவரை 96,43,79,212 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 50,63,845 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் ஏன் திமுகவுடன் கூட்டணி? கமல் சொன்ன விளக்கம் யாருக்காவது புரிந்ததா?

இன்று முதல் நவம்பர் 22 வரை தமிழகத்தில் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

ரிமோட்லாம் தூக்கி போட்டு உடைச்சிட்டு ஏன் திமுக?.. கமல் புதிய விளக்கம்...

பெங்களூரை விட்டு வெளியேறினால் கோடிக்கணக்கில் சலுகை.. கர்நாடக அரசு அதிரடி அறிவிப்பு..!

உயிர் போகும்போதும் குழந்தைகளை காப்பாற்றிய ஆட்டோ ஓட்டுனர்!.. சென்னையில் சோகம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments