விஜயதசமியன்று கோவில் திறப்பு குறித்து முதல்வர் இன்று ஆலோசனை!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (09:39 IST)
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு படிப்படியாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. கொரோனா மூன்றாம் அலை பரவும் அச்சத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்த நிலையில் விஜயதசமியன்று கோயில்களை திறக்க வாய்ப்புள்ளதா? என்று தமிழக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் வழக்கை  நேற்று மதியம் 1.30-க்கு ஒத்திவைத்தது.
 
அதன்பின்னர் கோவில்களை திறப்பது குறித்து முதல்வர் நாளை நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பார் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் விஜயதசமியன்று கோவில்கள் திறப்பு குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். அத்துடன், கொரோனா ஊரடங்கில் மேலும் தளர்வு அளிப்பது குறித்தும் முதல்வர் இன்று ஆலோசனை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

ஐந்து கூட இல்லை பூஜ்ஜியம்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியை ஏற்று கொள்ளாத மக்கள்..!

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments