Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2.40 லட்சமாக குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (09:45 IST)
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தொட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல குறைந்து 3 லட்சத்திற்கும் கீழாக உள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,40,842 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,65,30,132 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 3,741 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  2,99,266 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,34,25,467 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 28,05,399 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 19,50,04,184 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவம் பற்றி அவதூறாகப் பேசுவது பேச்சு சுதந்திரமா? ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்..!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்திற்கு பெங்களூரு போலீஸ் அனுமதி மறுப்பு.. அப்புறம் எப்படி நடந்தது?

மீண்டும் ஒரு சவரன் ரூ.73,000ஐ தாண்டியது.. இன்று ஒரே நாளில் 320 ரூபாய் உயர்வு..!

தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இ-ஆதார் கட்டாயம் என மத்திய ரயில்வே அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரையில்
Show comments