Publish Date: Fri, 02 Apr 2021 (09:41 IST)
Updated Date: Fri, 02 Apr 2021 (09:43 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,23,03,131 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 469 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,63,396 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,15,25,039 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,14,696 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.