ஒரே நாளில் 28,903 பாதிப்புகள் உறுதி – இந்தியாவில் கொரோனா நிலவரம்

Webdunia
புதன், 17 மார்ச் 2021 (09:48 IST)
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டில் ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,14,38,734 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 188 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,59,044 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,10,45,284 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 2,34,406 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விவசாயிகளின் வேதனை உங்க சாதனையா? அவங்க சாபம் சும்மா விடாது! - திமுகவை விமர்சித்த அன்புமணி!

இன்று மாலை, இரவில் காத்திருக்குது கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

குஜராத் கடல் எல்லை அருகே பாகிஸ்தான் ராணுவம்! இந்தியா எச்சரிக்கையை மீறி அட்டகாசம்!

மாற்றமின்றி விற்பனையாகி வரும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

இன்றே புயலாக வலுவடையும் மோன்தா! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments