Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு! – இன்றைய நிலவரம்!

Webdunia
புதன், 10 மார்ச் 2021 (10:21 IST)
உலக நாடுகள் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 17,921 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,12,62,707 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  1,58,063 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,09,20,046 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1,84,598 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஓடும் பேருந்தில் நடத்துனருக்கு நெஞ்சுவலி: பரிதாபமாக உயிரிழந்ததால் சோகம்..!

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments