காதலியுடன் உல்லாசம் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன்
, சனி, 16 செப்டம்பர் 2017 (15:12 IST)
காதலியுடன் உல்லாசமாக இருந்த காட்சியை முகநூலில் ஒளிபரப்பியதாக கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், ஒரு ஆணும், பெண்ணும் உல்லாமாக இருக்கும் லைவ் (நேரடி) வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அடிமாலி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
ஜவுளிக்கடையில் வேலை செய்யும் அந்த பெண், தன்னுடைய காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டாயப்படுத்தி தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், அதை தனக்கு தெரியாமல் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி விட்டதாகவும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நெடுங்கூடம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் லினு(23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும் கடந்த சில மாதங்களாக அவர் வாலிபர் லினுவுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
அதேபோல், அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை பழிவாங்கவே வீடியோ எடுத்ததாகவும், ஆனால், அதை பேஸ்புக்கில் லைவ் வீடியோவாக வெளியிடவில்லை எனவும் லினு மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அந்த பெண்ணும், லினுவும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் அதில் இருந்தன.
இதையடுத்து, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லினுவை, காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்