கொரோனா லாக்டவுன் காரணமாக இளைஞர்களிடம் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக உலகமே முடங்கியுள்ளது. இதில் முக்கியமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களும், இளைஞர்களும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதனால் இளைஞர்களிடம் அதிகமாகி வந்த குடிப்பழக்கம் வெகுவாக குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது சம்மந்தமாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக நேரம் வீட்டில் இருப்பதாலும், நண்பர்களை சந்திப்பது குறைந்துள்ளதாலும் குடிப்பழக்கம் குறைந்துள்ளதாக பெரும்பாலான இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவால் காற்று மாசு குறைபாடு உள்ளிட்ட சில நன்மைகளும் நடந்துள்ளன.