Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்களால் எதுவும் செய்ய முடியாது.. வக்பு சட்டத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

Mahendran
செவ்வாய், 20 மே 2025 (16:52 IST)
மத்திய அரசு, இஸ்லாமியர்களின் வக்பு நிலங்களை நிர்வகிக்கும் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை கடந்த ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசு தலைவர் ஒப்புதலுடன் உடனடியாக மசோதா சட்டமானது. ஆனால்  இதை பல எதிர்க்கட்சிகள் மத உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டி வருகின்றன.
 
இதற்கு எதிராக பல அமைப்புகள் மற்றும் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் சுமார் 70க்கு மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்தன. ஏப்ரல் மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, புதிய வக்பு சட்டத்தின் கீழ் எந்தவொரு நடவடிக்கையையும் இடைக்காலமாக நிறுத்தும் உத்தரவும் வழங்கப்பட்டது.
 
இன்றைய விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி உட்பட அமர்வில் நடைபெற்றது. மனுதாரர்களின் வழக்கறிஞர் கபில் சிபில், இந்த சட்டம் வக்பு நிலங்களை முறையாக இல்லாமல் பறிக்கும் நோக்கத்தில் உள்ளது எனக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் மதத்தை கடைப்பிடிக்கும் ஒருவர் மட்டுமே வக்புக்கு சொத்து வழங்க முடியும் என்ற விதி அரசியலமைப்புக்கு முரணாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
தலைமை நீதிபதி கவாய், பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களை சட்டப்பூர்வமாகக் கருதுகிறோம்; அதனை அரசியலமைப்பிற்கு முரண்பாடாகக் கருத வலுவான காரணம் இல்லாவிடில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று பதிலளித்தார்.
 
இதனையடுத்து, வழக்கறிஞர் சிபில், புதிய சட்டம் கிராம பஞ்சாயத்துகளும் அரசுப் அதிகாரிகளும் வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதில் கூடுதல் அதிகாரம் பெற்றிருப்பது நியாயமல்ல என தெரிவித்தார். இரு தரப்பின் வாதங்களை கேட்டு நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் ரத்து..!

எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என நான் சொல்லவே இல்லை: பிரேமலதா

ஜிஎஸ்டி கவுன்சிலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவை வரவேற்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

GST Reforms: அன்றே சொன்ன ராகுல்காந்தி! இன்றைக்கு செய்த பாஜக அரசு! - வைரலாகும் ட்வீட்!

வடமாநில வெள்ளத்திற்கு இதுதான் காரணம்.. மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்சநீதிமன்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments