Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காந்தி எப்படித் தற்கொலை செய்துகொண்டார் ? – சர்ச்சையைக் கிளப்பிய பள்ளி வினாத்தாள் கேள்வி !

Webdunia
திங்கள், 14 அக்டோபர் 2019 (13:14 IST)
குஜராத் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றின் வினாத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற கேள்வி சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் தேசதந்தையாக கருதப்பட்டு வரும் மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய வரலாற்றில் அந்நாள் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காந்தியின் மரணம் குறித்து சர்ச்சையானக் கேள்வி ஒன்று பள்ளி வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது. சுபலாம் ஷாகா விகாஸ் சங்குல் என்ற அமைப்பு குஜராத்தில் இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் கீழ் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகளில் ஒன்றில் கடந்த 12 ஆம் தேதி நடந்த தேர்வு ஒன்றின் வினாத்தாளில் காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்  என்ற சர்ச்சைக்குரிய கேள்வி இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து காந்திநகர் மாவட்ட தலைவர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதன் பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments