Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பண்டிகைகளுக்கு நமது மக்கள் செலவழிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா?

Advertiesment
பண்டிகைகளுக்கு நமது மக்கள் செலவழிக்கும் பணம் எவ்வளவு தெரியுமா?
, ஞாயிறு, 2 அக்டோபர் 2016 (13:25 IST)
பண்டிகைக் காலங்களின் இந்திய மக்கள் ரூ.25 ஆயிரம் கோடி செலவழிப்பார்கள் என்று தொழில்துறை அமைப்பான அசோசெம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
 

 
சனிக்கிழமையன்று நவராத்திரி பண்டிகையுடன் இந்த பண்டிகை காலம் தொடங்குகிறது. இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அசோசெம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
 
இந்தியா முழுவதும் 10 முக்கிய நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. குறிப்பாக மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, தில்லி-என்சிஆர், ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ நகரங்களில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 25 வயது முதல் 40 வயதுக் குட்பட்ட 2,500 நபர்களிடம் கருத்து கேட்டறிந்துள்ளது.
 
கடைகளில் நீண்ட நேரம் நின்று வாங்குவதைவிட ஆன்லைன் நிறுவனங்களில் வாங்க முன்னுரிமை கொடுப்பதாக அந்த ஆய்வு கூறியுள்ளது. இ-டெய்ல் நிறுவனங்கள் அழகுசாதனப் பொருட்கள், ஆபரணங்கள், செல்போன்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றை ஆன்லைன் நிறுவனங்களின் தள்ளுபடிகளில் வாங்க தயாராக உள்ளனர்.
 
நவராத்திரியை அடுத்து தசரா, தீபாவளி, அதைத் தொடர்ந்து புத்தாண்டு, பொங்கல் என அடுத் தடுத்து பண்டிகைகள் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த ஆண்டில் செலவு செய்துள்ள தொகையை விடகூடுதலாக 25 சதவீதம் செலவுசெய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த ஆண்டு இந்த பண்டிகை காலகட்டத்தில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் சங்கத்தின் முன்னாள் துணை தலைவர் கே.என்.காளை மரணம்