தன் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் சதி.! டிஜிபியிடம் நடிகர் நிவின் பாலி மனு.!!

Senthil Velan
வியாழன், 5 செப்டம்பர் 2024 (14:10 IST)
தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் யார் என்று தெரியாது எனவும், இந்த புகாரின் பின்னணியில் சதி இருப்பதாகவும் மலையாள நடிகர் நிவின் பாலி டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார். 
 
மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை இருப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பிறகு, நடிகர்கள் பலர் மீது பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் அருகே கோதமங்கலம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மலையாள சினிமா தயாரிப்பாளரான ஏ.கே.சுனில் மற்றும் மலையாள நடிகர் நிவின் பாலி ஆகியோர் தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக புகார் அளித்திருந்தார். 

இந்த புகாரையடுத்து, நடிகர் நிவின் பாலி உள்ளிட்ட 5 பேர் மீது கூட்டு பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் நிவின் பாலி தன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள பெண்ணை யார் என்றே எனக்குத் தெரியாது என்றும் இது ஒரு பொய்யான புகார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில்  நடிகர் நிவின் பாலி டிஜிபியிடம் புகார் மனு அளித்துள்ளார்.


ALSO READ: சர்ச்சையை கிளப்பிய 'GOAT' படத்தின் தலைப்பு.! விசிக - பாஜக இடையே கருத்து மோதல்..!!


தன் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் யார் என்று தெரியாது எனவும், இந்த புகாரின் பின்னணியில் சதி இருப்பதாக  மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த பொய் குற்றச்சாட்டின் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை போலீசார் விசாரிக்க வேண்டும் என நடிகர் நிவின் பாலி  கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்