சர்ச்சையை கிளப்பிய 'GOAT' படத்தின் தலைப்பு.! விசிக - பாஜக இடையே கருத்து மோதல்..!!

Senthil Velan
வியாழன், 5 செப்டம்பர் 2024 (13:35 IST)
எம்.பி ரவிக்குமாருக்கு சனாதனம் பற்றி என்ன தெரியும் என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார். 
 
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள  ‘தி கோட்’ திரைப்படம் இன்று  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தி கோட்  திரைப்படம் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியாகியுள்ள முதல் திரைப்படம் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
 
இந்நிலையில் தி கோட் படத்தின் தலைப்பு குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார், புதிய சர்ச்சை ஒன்றை எழுப்பி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? 
 
‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்! ‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? என்று எம்பி ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
அவருக்கு பதிலடி கொடுத்துள்ள, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், சனாதனம் பற்றி ரவிகுமாருக்கு என்ன தெரியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார். சனாதனம் பற்றி ரவிக்குமாருக்கு தெரியவில்லை என்பதை பட்டவர்த்தனமாக ஒப்புக் கொண்டுள்ளார் என்று தமிழிசை கூறியுள்ளார்.


ALSO READ: பி.எம்.ஸ்ரீ. திட்டத்தை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது.! ஆளுநர் ஆர்.என் ரவி குற்றச்சாட்டு.!!
 
பாஜகவிடம் தான் சமாதானம் பார்த்தார்கள் என்றால் இப்போது விஜய்யிடம் சனாதனம் பார்க்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

NDA கூட்டணியில் சேர்ந்ததால் எழுச்சி பெற்ற ராம் விலாஸ் பாஸ்வான் கட்சி.. 22 தொகுதிகளில் முன்னிலை..!

585 வாக்குகள் மட்டுமே தேஜஸ்வி யாதவ் முன்னிலை.. விரட்டியபடி வரும் பாஜக வேட்பாளர்..!

ஐந்து கூட இல்லை பூஜ்ஜியம்.. பீகாரில் பிரசாந்த் கிஷோர் கட்சியை ஏற்று கொள்ளாத மக்கள்..!

பீகார் தேர்தலில் காங்கிரஸ் படு தோல்வி!.. 4 இடங்களில் மட்டுமே முன்னிலை...

கரூர் தவெக கூட்ட நெரிசல் வழக்கு.. அனைத்து ஆவணங்களும் திருச்சிக்கு மாற்றம்!

அடுத்த கட்டுரையில்
Show comments