Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடைசெய்ய முயற்சித்தால் காங்கிரஸ் சாம்பலாகிவிடும்- பாஜக தலைவர் எச்சரிக்கை

nalinkumar bjp
, சனி, 27 மே 2023 (17:45 IST)
கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக சித்தராமையாவும், துணைமுதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ்  கட்சி தேர்தலின்போது, பிஎப்ஐ போன்று வெறுப்புணர்வை தூண்டும் பஜ்ரங் தல் போன்ற அமைப்புகளை தடை செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் மகனும் சித்தப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரியங்க் கார்கே அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு இன்னும் துறை ஒதுக்கவில்லை.

அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் ‘’கர்நாடகாவில் அமைதியை குலைக்கவோ, மதரீதியிலான வெறுப்புணர்வை பரப்பினாலோ, மத அமைப்புகளாக இருந்தாலும், அரசியல் அமைப்புகளாக இருந்தாலும் அதை தடை செய்ய நமது அரசு தயங்காது…அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பாக இருந்தாலும் சரி மற்ற அமைப்புகளாக இருந்தாலும் சரி’’ என்று கூறியிருந்தார்.

இதற்கு கர்நாடக பாஜக தலைவர் நலின்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர், அதில்,‘’கர்நாடக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடை செய்தால் கடும் விளைவுகள் சந்திக்க நேரிடும்’’ என்று எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து, நலின்குமார் கூறியதாவது: ‘’பஜ்ரங்தல், ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தடைசெய்ய முயற்சித்தால், காங்கிரஸ் சாம்பலாகிவிடும்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!