Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மம்தா இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது: காங்கிரஸ்

Mahendran
புதன், 24 ஜனவரி 2024 (15:03 IST)
மேற்குவங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவதாக சற்றுமுன் அறிவித்த நிலையில் மம்தா பானர்ஜி இல்லாத இந்தியா கூட்டணியை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார் 
 
மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மம்தா பானர்ஜியின் கட்சி இடையே தொகுதி உடன்பாடு பேச்சு வார்த்தை நடந்த நிலையில் திடீரென மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்றும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இதனால் காங்கிரஸ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது 
 
இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜகவை தோற்கடிக்க எந்த தியாகத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருப்பதாகவும் இந்தியா கூட்டணிக்கு வலுவான தூண்களில் ஒருவர் மம்தா பானர்ஜி என்றும் அவர் இல்லாத இந்தியா கூட்டணியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். 
 
இந்தியா கூட்டணி கட்சிகளில் உள்ள அனைவரும் இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் இணைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  இந்தியா கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த மம்தா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments