Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சித்தராமையா வீட்டின் முன் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்.. என்ன காரணம்?

Webdunia
புதன், 24 மே 2023 (10:30 IST)
கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா  வீட்டின் முன் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திடீரென போராட்டம் நடத்தி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் வெற்றி பெற்று ஆளுங்கட்சியாக மாறி உள்ளது. 
 
முதல்வராக சித்தராமையா  துணை முதல்வராக டிகே சிவகுமார் மற்றும் அமைச்சர்கள் சமீபத்தில் பதவி ஏற்றனர். இந்த நிலையில் கர்நாடக மாநிம் ஹிரியுர் தொகுதி எம்எல்ஏ சுதாகருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில நாட்களாக இருந்து வருகிறது. 
 
இந்த நிலையில் திடீரென இன்று காலை கர்நாடக முதல்வர் சித்தராமையா  இல்லத்தின் முன் ஹிரியூர் தொகுதி காங்கிரஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து சுதாகர் எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவிகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை! - நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கைது!

இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு கிராம் ரூ.8000ஐ நெருங்கியது..!

வேகமாக பரவி வரும் ஜிபிஎஸ் நோய்.. 2 கிராமங்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

எலான் மஸ்கிற்கு கூடுதல் அதிகாரம்: டிரம்பை கண்டித்து அமெரிக்காவில் திடீர் போராட்டம்..!

பனியில் சறுக்கி தலைக்குப்புற கவிழ்ந்த விமானம்! பயணிகள் நிலை என்ன? - கனடாவில் அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments