Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோனியா காந்தியுடன் மோதல்: அமைச்சர் ஸ்மிருதி இரானி வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (08:17 IST)
நேற்று பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் அமைச்சர் ஸ்மிருதி இரானி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து இன்று ஸ்மிருதி இரானி வீட்டின் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் எம்பி அதிர் ரஞ்சன் சௌத்ரியின் ஜனாதிபதி அவமதிப்பு காரணமாக நேற்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதினர்
 
இந்த நிலையில் சோனியா காந்தியுடன் மோதல் போக்குடன் நடந்து கொண்ட ஸ்மிருதியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் இன்று அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இது குறித்து காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் கூறும்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மக்களவையில் சோனியா காந்தியிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்றும் சட்டவிரோதமான பார் ஊழல் அம்பலம் ஆனதால் ஸ்மிருதி இரானி கடும் கோபத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார். ஸ்மிருதி இராணியின் நேற்றைய நடத்தையால் நாடாளுமன்றத்தின் கண்ணியம் கெட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டகேங்ஸ்டர் ரவுடி.. அதிர்ச்சியில் சிறை அதிகாரிகள்..!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழ்நாட்டுக்கு கனமழையா?

அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் சோதனை எதிரொலி: தலைமை செயலகத்தில் பலத்த பாதுகாப்பு..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. புதினிடமும் பெருமை பேசிய டிரம்ப்..!

பிரசவ வலியால் துடித்த பெண்.. ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்த்த பெண் காவலர்.. குவியும் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments