Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்திக்கு ஒரு மகன்?: வாரிசு குறித்து அமித்ஷா அதிரடி!

ராகுல் காந்திக்கு ஒரு மகன்?: வாரிசு குறித்து அமித்ஷா அதிரடி!

Webdunia
திங்கள், 30 ஜனவரி 2017 (13:41 IST)
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவராக ராகுல் காந்தி இருக்கிறார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனிய காந்தி உள்ளார். துணைத்தலைவராக ராகுல் காந்தி உள்ளார். அடுத்த தலைவரும் ராகுல் காந்தி தான் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியினர் உள்ளனர். காலம் காலமாக அவர்களது குடும்பத்தினரே காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக உள்ளனர்.
 
இந்நிலையில் இதனை பாஜக தலைவர் அமித்ஷா விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் மோடியை எர்க்க அகிலேஷ் யாதவும், ராகுல் காந்தியும் இணைந்துள்ளனர். அந்த மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
 
இதனையடுத்து பத்திரிகை ஒன்றுக்கு சிறப்பு பேட்டியளித்த பாஜக தலைவர் அமித்ஷா, வாரிசு அரசியலில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது. ராகுல் காந்திக்கு ஒரு மகன் இருந்திருந்தால் நாளைய காங்கிரஸ் தலைவர் அவர்தான் என கூறியுள்ளார்.
 
மேலும், உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலையொட்டி பாஜகவின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு அல்லது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு என்ற இரு வழிகள் உள்ளன. அதனை நிறைவேற்றுவோம் என கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்காக அனைத்து கட்சி கூட்டம்: வெற்று விளம்பர மாடல் தி.மு.க அரசின் கபட நாடகம்: விஜய்

மெஸ்ஸியை பிச்சைக்காரனாக மாற்றிய ஏஐ வீடியோ.. ரசிகர்கள் கண்டனம்.!

கட்சி பணிகளுக்கு உதவாதவர்கள் ஓய்வு எடுங்கள்: காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு கார்கே எச்சரிக்கை..!

ரஷ்யாவுக்கு வாருங்கள்.. வெற்றி விழாவை கொண்டாடுவோம்: மோடிக்கு புதின் அழைப்பு..!

இன்று ஒரே நாளில் 2வது முறை அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments