Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருணாசல பிரதேசத்தில் 16-ம் தேதி காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்

அருணாசல பிரதேசத்தில் 16-ம் தேதி காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்
, வெள்ளி, 15 ஜூலை 2016 (04:19 IST)
முதல்வர் நபாம் துகி, 16-ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.


 


அருணாசல பிரதேச மாநிலத்தில் நபம் துகி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. 60 உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 47 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். கடந்த ஆண்டு நபம் துகிக்கு எதிராக 21 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினார்கள். இது அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியதால் கடந்த ஜனவரி மாதம் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதை எதிர்த்து நபம் துகி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அரசியல் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து நபம் துகி அருணாசல பிரதேச முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில் அம்மாநில கவர்னர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா இன்று வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் நபாம் துகி, விரைவில் சட்டசபையை கூட்டி, 16-ம் தேதி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். “ என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மர்மமாக இறந்த பெண்: கொலையாளி யார் என்று தெரியாமல் குழம்பும் காவல்துறை