Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்ற கூட்டத்திற்கு ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை.. என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (12:14 IST)
இன்று குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் இன்றைய கூட்ட தொடரில் ஒரு காங்கிரஸ் எம்பி கூட வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் தற்போது இந்த கூட்டத்தை தொடங்கி வைத்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் உரையாற்றி வருகிறார்.
 
இந்த நிலையில் திமுக எம்பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்ட நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் யாரும் இன்று கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நேற்று காஷ்மீரில் முடிவடைந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்காக காங்கிரஸ் எம்பிக்கள் சென்றிருந்ததாகவும் அங்கிருந்து திரும்பி வருவதற்கு விமானம் கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது
 
ஸ்ரீ நகரில் இருந்து டெல்லி வருவதற்கான விமானம் வானிலை காரணமாக காலதாமத்துடன் இயக்கப்பட்டு வருவதால் குறிப்பிட்ட நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களால் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ZOHO சி.இ.ஓ பதவியிலிருந்து திடீரென விலகிய ஸ்ரீதர் வேம்பு.. என்ன காரணம்?

சர்வதேச ஹைப்பர்லூப் போட்டி: ஆசியாவிலேயே முதன்முறையாக சென்னையில்.. தேதி அறிவிப்பு..!

காசாவுக்குள் நுழைய பாலஸ்தீனியர்களுக்கு அனுமதி! 6 பிணை கைதிகள் விரைவில் விடுவிப்பு!

அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

இந்தியாவின் தேசிய மதம் சனாதன தர்மம் தான்: உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments