Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒற்றுமை பாத யாத்திரையின்போது மூத்த தலைவர் திடீர் மரணம்: ராகுல்காந்தி இரங்கல்

Advertiesment
rahul
, செவ்வாய், 8 நவம்பர் 2022 (17:10 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரையின் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி திடீரென மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில நாட்களாக ஒற்றுமை பாதயாத்திரை நடத்திவருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாதயாத்திரையின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணகுமார் என்பவர் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது
 
இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர் அவரை பரிசோதனை செய்து ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர் 
 
இதனை அடுத்து பாதை யாத்திரை சென்றவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஒற்றுமை பாதயாத்திரையில் கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணகுமார் மரணமடைந்த தகவல் கேட்டு ராகுல்காந்தி அவருக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் போலி வாங்கிகள் செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.