தேர்தல் நேரத்தில் வெளிநாடு செல்லும் ராகுல்காந்தி – பாஜக, காங்கிரஸ் மோதல் !

Webdunia
செவ்வாய், 8 அக்டோபர் 2019 (08:16 IST)
ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நேரத்தில் ராகுல்காந்தி வெளிநாடு செல்வது ஏன் பாஜக எழுப்பிய கேள்விக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

மகாராஷ்டிரம், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்களவைத் தோல்விக்குப் பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால் காங்கிரஸ் வெற்றிப் பெற எப்படியாவது முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தி நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தியான வகுப்புகளில் கலந்துகொள்வதாகத் தெரிகிறது.

இந்நிலையில் இரண்டு மாநிலங்களில் தேர்தல் நடக்கும்போது ராகுல்காந்தி வெளிநாடு சென்றது ஏன் என பாஜக கேள்வியெழுப்ப அதற்குக் காங்கிரஸ் பதிலளித்துள்ளது. அதில் ‘இந்திய ஜனநாயகத்தில் காலம்காலமாக பொது வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எந்தவொரு மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மதிக்கப்படுகிறது. ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது.’ எனப் பதிலளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; சதியை முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

'ரஃபேல்' விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்: பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் முறியடிப்பு!

X.com டொமைன் மாற்றம்: நவம்பர் 10 முதல் twitter.com செயல்படாது.. லாகின் செய்ய 2FA தேவை..!

மருத்துவ சிகிச்சைக்காக சாமியார் அசராமுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு..!

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கோவாவில் கைது! போதைப்பொருள் ஆலை நடத்தியவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments