Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதானி முறைகேடு விவகாரம்: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

இனி ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா என்பதே இருக்காது

Siva

, வியாழன், 21 நவம்பர் 2024 (11:50 IST)
அதானி முறைகேடு விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என காங்கிரஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள போலி நிறுவனங்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்ட நிலையில், தற்போது சூரிய ஒளியின் ஒப்பந்தங்களை பெறுவதற்காக 2100 கோடி ரூபாய் அதானி கொடுத்ததாகவும், அதை மறைத்து அமெரிக்காவில் முதலீடுகளைப் பெற்றதாகவும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கூறியபோது, கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அதானி மீது பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும். மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் குறித்த கேள்விகளுக்கு இப்போது வரை பதில் அளிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.

மேலும், லாபம் தரக்கூடிய சூரிய ஒளி மின்சார விநியோகத்தை பெறுவதற்கு 2,100 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், நம்பகத்தன்மை கொண்ட புதிய செபி தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்றும், முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.


Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!