நாடாளுமன்றத்தில் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளரான அபிஷேக் சிங்வி டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘காங்கிரஸ் கட்சி நீண்டகால பாரம்பரியம் கொண்ட கட்சி. தேர்தலில் காங்கிரஸ் தனது சாதனைகளை சொல்லி தீவிரமாக பிரச்சாரம் செய்தது. ஆனால் சூழ்நிலைகள் வேகமாக மாறிவிட்டன. சில விஷயங்களில் நாங்கள் எங்களை திருத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. எங்களை நாங்களே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் வந்து இருக்கிறது’ என்று கூறினார்.
மேலும், ‘கடந்த 10 ஆண்டுகளாக நாங்கள் பதவியில் இருந்தோம். இப்போது எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எனவே காங்கிரஸ் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படும். இன்னும் சில ஆண்டுகளில் சூழ்நிலைகள் மாறும். காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சி பெறும்’ என்று அபிஷேக் சிங்வி கூறினார்.
LIVE Tamilnadu Lok Sabha 2014 Election Results
LIVE Lok Sabha 2014 Election Results