முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் தலைவர்.. தெலுங்கானா தேர்தலில் திடீர் திருப்பம்..!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:25 IST)
தெலுங்கானா மாநில தேர்தல் நவம்பர் 30ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவை எதிர்த்து தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் ஐந்து மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மிசோரம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு ஆளும் சந்திரசேகர் ராவ் கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அவர்களை எதிர்த்து காமரெட்டி என்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி என்பவர் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் எம்பி ஆக இருக்கும் நிலையில் தற்போது எம்எல்ஏவுக்கு போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா மாநிலத்தில் மூன்று தொகுதிகளை தவிர காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments