Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹரியானா தேர்தல்: காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணியா? பாஜகவுக்கு சிக்கல்?

Siva
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:56 IST)
ஹரியானா மாநிலத்தில் அக்டோபர் ஐந்தாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இங்கு பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க ராகுல் காந்தி திட்டமிட்டு இருப்பதாகவும் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க அவர் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்த நிலையில் நேரடியாக பரூக் அப்துல்லாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க செய்தார்.

இதே வியூகத்தை தான் அரியானாவிலும் ராகுல் காந்தி செயல்படுத்த இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் ஒன்றிணைக்க காங்கிரஸ் மற்றும் ஆத்மி கட்சியை கூட்டணியில் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜகவுக்கு எதிரான அலை ஹரியானா மாநிலத்தில் வீசிவரும் நிலையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் கூட வென்றுவிடும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ரிஸ்க் எடுக்க விரும்பாத ராகுல் காந்தி ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிக்கலாம்! சென்னை பல்கலைக்கழகம் புதிய திட்டம்!

11 காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.. பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரம்..!

இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளர் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்..!

ரியல் எஸ்டேட் போட்டி! கட்டுமான நிறுவனங்கள் சிறப்பு வசதிகளை விளம்பரம் செய்ய தடை!

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments