Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமோசா உள்ளே இருந்த ஆணுறை: புனே கேண்டீன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு.!

Mahendran
செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (15:47 IST)
புனேவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் கேண்டினில் விற்பனை செய்யப்பட்ட சமோசாவில் ஆணுறை இருந்ததை அடுத்து அந்த கேண்டீன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புனேவில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனத்தின் கேண்டினில் விற்பனை செய்யப்பட்ட சமோசாக்களில் ஆணுறை, குட்கா, கற்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
இதனை அடுத்து சமோசா வழங்கும் ஒப்பந்ததாரர்கள், சமோசா விற்பனை செய்த கேண்டின் உரிமையாளர்கள் உட்பட சிலரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

சமோசாக்களில் ஆணுறை, குட்கா, கற்கள் போன்றவை இருந்தது குறித்து வாடிக்கையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இது குறித்து விசாரணையின் போது ஏற்கனவே உணவு வழங்கி வந்த ஒரு நிறுவனம் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பழிவாங்கும் நடவடிக்கையில் வேண்டும் என்றே இவ்வாறு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 இந்த விவகாரம் குறித்து கேண்டின் உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யிருப்பதாகவும் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அடுத்த கட்ட விசாரணை நடந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்