Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட கூடாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை..!

Siva
செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:54 IST)
வயநாடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆனிராஜா என அறிவித்து விட்டதால் அந்த தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

மோடியை வீழ்த்த வேண்டும் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் உருவான இந்தியா கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இருக்கும் நிலையில் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் திடீரென ஆனி ராஜா என்ற வேட்பாளரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்  கட்சியின் பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் பேசுகையில் வயநாடு தொகுதிக்கான வேட்பாளரை நாங்கள் அறிவித்து விட்டதால் ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்

பாஜகவுக்கு எதிராக தேர்தலை எதிர்கொள்வது உண்மை என்றால் நாங்கள் போட்டியிட்ட வேட்பாளரை அவர் எதிர்க்காமல் வேறு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கூறியுள்ளார். இது குறித்து காங்கிரஸ் என்ன முடிவு எடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்மில் பரிந்துரை செய்த ஊக்கமருந்து.. 3 நாட்கள் சிறுநீர் வெளியேறாமல் உயிரிழந்த வாலிபர்..!

7 நாட்களில் 23 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம்.. 19 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்..!

காற்றழுத்த தாழ்வுநிலை ஒரு பக்கம் இருக்கட்டும்.. இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும்..!

அரை மணி நேரத்தில் ஆதாரங்களை ஒப்படையுங்கள்.. சீமான் வழக்கில் நீதிபதி உத்தரவு..!

டாஸ்மாக் வழக்கு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments