Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்து மத கடவுளை அவமதித்த காமெடி நடிகர் கைது!

Advertiesment
இந்து மத கடவுளை அவமதித்த காமெடி நடிகர் கைது!
, ஞாயிறு, 3 ஜனவரி 2021 (14:02 IST)
இந்துமத கடவுளை அவமதித்ததாக காமெடி நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
குஜராத் மாநிலத்தை சேர்ந்த காமெடி நடிகர் முனாவர் பாரூகி. இவர் குஜராத் மொழியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சமீபத்தில் ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுடன் வந்த நடிகர் முனாவர் பாரூகி, இந்து மத கடவுள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் 
 
இது குறித்து அங்கு உள்ளவர்கள் எதிர்த்து கேட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முனாவர் பாரூகி மீது காவல்துறையில் புகார் செய்யப்பட்ட நிலையில் இந்து கடவுளையும் மத்திய அமைச்சரையும் அவதூறாக பேசிய காமெடி நடிகரை போலீசார் கைது செய்தனர் 
 
முனாவர் பாரூகி மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் காமெடி நடிகருடன் வந்த அவருடைய நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் இது ஒரு திருப்புமுனை! – கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோடி பாராட்டு!