வளமாகவும், நலமாகவும், அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் இன்று 48வது உலக பொருளாதார மாநாடு இன்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
நமது வாழ்முறையை தொழில்நுட்பம் மாற்றி அமைத்துள்ளது. அரசியல் ஆகட்டும், பொருளாதாரம் ஆகட்டும், அனைத்திலுமே தொழில்நுட்பத்தின் தாக்கம் காணப்படுகிறது. தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த உலகத்தால் நம்மை வளைக்கவும், உடைக்கவும் முடியும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைகளுக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்து வந்துள்ளது. செல்வத்துடன் நலமாக வாழ, ஆரோக்கியத்துடன் முழுமையான வாழக்கையை வாழ, வளங்களுடன் அமைதியும் பெற, போன்றவைகளை விரும்பினால் இந்தியாவுக்கு வாருங்கள். உங்களது வருகை எப்போதும் நல்வரவாக அமையட்டும் என்று மோடி கூறியுள்ளார்.
வளரும் பொருளாதாரம் படைத்த 79 நாடுகள் பட்டியலில் இந்தியா 60வது இடத்தை பிடித்துள்ளது. இதனை உலக பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மோடி நலமாக வாழ, வளமாக வாழ, இந்தியா வாருங்கள் என்று கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.