Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்பி எடுப்பதில் நண்பர்கள் பிஸி - நீரில் மூழ்கி இறந்த மாணவர்

Advertiesment
செல்பி எடுப்பதில் நண்பர்கள் பிஸி - நீரில் மூழ்கி இறந்த மாணவர்
, செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (13:36 IST)
சக மாணவன் நீரில் மூழ்குவது தெரியாமல், அவரின் நண்பர்கள் செல்பி எடுத்துக்கொண்டிருந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.


 

 
கர்நாடக மாநிலம் ஜெயநகர் பகுதியில் உள்ள நேஷனல் கல்லூரியில் படித்து வரும் மாணவர்கள் என்.சி.சி பயிற்சிக்காக ராமநகரா மாவட்டத்தின் அருகே உள்ள ரவகோண்ட்லு பெட்டா என்ற மலைப்பகுதிக்கு சமீபத்தில் சென்றனர்.
 
அந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், அருகில் உள்ள ஒரு ஏரிக்கு ஒரு குழுவாக சென்றுள்ளனர். அங்கு அவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் போது விஸ்வாஸ் என்ற மாணவர் தண்ணீரில் தத்தளித்த படி நீரில் மூழ்கியுள்ளார். ஆனால், அதை கவனிக்காத அவரின் நண்பர்கள் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். 

webdunia

 

 
அதன் பின் தனது நண்பர் விஷ்வாஸை அவர்கள் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. அவர்கள் எடுத்த செல்பி புகைப்படத்தில் விஸ்வாஸ் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது பதிவாகியுள்ளது. 
 
இறுதியில், நீரில் மூழ்கி இறந்த விஷ்வாஸின் உடலை போலீசார் மீட்டனர். இதனையடுத்து, இது கல்லூரி நிர்வாகத்தின் கவனக்குறைவு எனக் கூறி மாணவனின் பெற்றோர்கள் கல்லூரியின் முன்பு அமர்ந்து போரட்டம் நடத்தினர்.  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்த பின்பே, விஷ்வாஸின் உடலை அடக்கம் செய்ய அவர்கள் எடுத்து சென்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக்கை தொடர்ந்து வாட்ஸ்அப் சேவைக்கு தடை விதித்த சீனா