கர்நாடக மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆரம்ப முதலே முன்னிலையில் உள்ளது. சற்று முன் காங்கிரஸ் கட்சியை 135 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் அக்கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி 63 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற ஜனதா கட்சி 22 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகள் கையில் இருந்தாலே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் 135 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ளதால் அக்காட்சி ஆட்சியைப் பிடித்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பதவியை இன்று பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. பாஜக ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.